அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினார் டிமிட்ரோவ்!

0
582
Madrid Open 2018 Grigor Dimitrov news Tamil

(Madrid Open 2018 Grigor Dimitrov news Tamil)

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் கனடாவின் மிலோஸ் ரோனிச் அபார வெற்றிபெற்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ரோனிச், பல்கேரியாவின் முன்னணி வீரர் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

தொடர்ச்சியாக பல டென்னிஸ் தொடர்களில் முன்னணி வீரர்களுக்கு சவால் கொடுத்து வரும் டிமிட்ரோவ், இந்த போட்டியில் 1-2 என அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

போட்டியின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய ரோனிச் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டில் சுதாரித்துக்கொண்ட டிமிட்ரோவ் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி போட்டியை சமப்படுத்தினார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோனிச் 6-3 என வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ரோனிச் அடுத்த சுற்றில் கனடாவின் மற்றுமொரு வீரரான டெனிஸ் சபவலோவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>