இத்தாலி ஓபனிலிருந்து விலகினார் செரீனா!

0
578
serena williams withdraws Italian Open 2018 news Tamil

(serena williams withdraws Italian Open 2018 news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் நாளை ரோமில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த தொடரில் விளையாடவுள்ளதாக அறிவித்திருந்த செரீனா திடீரென விலகியுள்ளார்.

கடந்த வருடம் குழந்தை பிரசவித்திருந்த செரீனா, போட்டிகளில் சுமார் ஒருவருடத்தின் பின்னர் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். எனினும் 2016ம் ஆண்டு நடைபெற்ற ரோலண்ட் கோரஸ் போட்டித் தொடரையடுத்து, செரீனா களிமண் தரையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
எனினும் இத்தாலி ஓபனில் ஆடுவார் என எதிர்பார்த்த போதிலும், தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள பிரான்ஸ் ஓபனிலும் செரீனா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த செரீனா, களிமண் தரையில் விளையாடுவதற்கு மேலும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>