சிறுத்தையினால் அச்சத்தில் வாழும் தோட்ட மக்கள்

0
689
Leopard attack Fearing estates people

(Leopard attack Fearing estates people)
புஸல்லாவை நயாபான தோட்டத்தின் மேமலை பிரிவில் நடமாடும் சிறுத்தைப் புலியினால் இந்தத் தோட்டத்திலுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இங்குள்ள காட்டுப் பகுதியிலும், தேயிலை புதர்களிலும் இந்த சிறுத்தைப்புலி நடமாடுவதாகவும் இந்தத் தோட்ட மக்களின் வளர்ப்பு நாய்கள் பல இவ்வாறு சிறுத்தையினால் தாக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிறுத்தைப்புலி எந்த நேரமும் மக்களை தாக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரிதும் நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் 45 வயதான சிவலிங்கம் தெரிவிக்கையில், தனது இரு வளர்ப்பு நாய்களை இந்தச் சிறுத்தைப்புலி தாக்கியதால் ஒன்று உயிரிழந்துள்ளதாகவும் மற்றையது படுகாயமுற்றுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த சிறுத்தைப்புலி தேயிலை செடிகளுக்குள் மறைந்திருப்பதனால் தேயிலை கொளுந்து பறிக்கச் செல்லும் மக்களை எந்தநேரமும் தாக்கலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சிறுத்தைபுலி பற்றி நுவரெலிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும், எனினும் இதற்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Leopard attack Fearing estates people