தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி

0
2513
Railway employee arrested

(Railway employee arrested Jaffna police Investigate)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்ததில் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்துகொண்ட புகையிரத உத்தியோகத்தரை யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் கோட்டையில் இருந்து புறப்பட்டு, யாழ். நோக்கிச் சென்ற புகையிரத்திலேயே நடைபெற்றதுடன், சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து தனது பயணத்தை யாழ். நோக்கி ஆரம்பித்திருந்தார்.

இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.

மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.

இதன்போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று எச்சரிக்கும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் புகையிரதம் யாழ். பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இதுதொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புகையிரத்துக்குள் வைத்து குறித்த பெண்ணை இம்சைப்படுத்துவது மற்றும் குறித்த ஊழியர் தகாத வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோ பதிவானது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த்துடன் அரசியல்வாதிகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலராலும் இந்த வீடியோ பதிவு மற்றும் அதுதொடர்பான தகவல்கள் றீ டிவிட் செய்யப்பட்டும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த புகையிரத ஊழியரை கைதுசெய்த யாழ். பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் முறைப்பாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Railway employee arrested Jaffna police Investigate