மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

0
724
old man standing voting queue died, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

old man standing voting queue died }

மலேசியா, தாமான் பெட்டாலிங்கிலுள்ள தேசிய இடைநிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக இன்று காலையில் வரிசையில் நின்றிருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிர் நீத்துள்ளார்.

78 வயதுடைய லோர் வூன் சோர் என்ற அந்த முதியவர் கைத்தடி ஊன்றியவாறு வாக்களிப்பு நிலையத்திற்கு வந்திருந்துள்ளார். அவருடன் அவருடைய மனைவியும் மகனும் வந்திருந்துள்ளனர்.

வரிசையில் நின்று கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உடனடியாக 999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவசர சிகிச்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, யுனிவர்சிட்டி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது, எனினும் காலை 9.45 மணியளவில் அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, அந்த முதியவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

அவருக்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்னை இருந்ததாகவும் அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்றும் அவருடைய மனைவி குறிப்பிட்டதாக மாவட்டப் போலீஸ் அதிகாரி ஓசிபிடி முகம்மட் ழானி தெரிவித்துள்ளார்.

Tags: old man standing voting queue died

<< RELATED MALAYSIA NEWS>>

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

 

<<Tamil News Groups Websites>>