பேரினவாதம் என்னும் பழைய முருங்கை மரத்துக்கு தாவிய மைத்திரி என்னும் புதிய வேதாளம்!

0
813
President Sirisena Speech Not Include Ethnic Problem Solution

(President Sirisena Speech Not Include Ethnic Problem Solution)

இலங்கையில் பல தசாப்தங்களை கடந்து நடைபெற்று வந்த இனப்பிரச்சனை தொடர்பில் ஆளும் அரசுகள் காட்டி வந்த அசமந்த போக்கை தமிழினம் காலம் காலமாய் கண்டு வந்த ஒன்று தான்.

ஆனாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட கொள்கை உடையவர்கள் என தம்மை காட்டி கொண்டு தமிழ் மக்களின் வாக்கு வங்கியின் ஆசியுடன் ஆட்சியில் அமர்ந்த ஜனாதிபதி மைத்திரி இனப்பிரச்சனையின் மீட்பராகவே பார்க்கப்பட்டார்.

ஆனாலும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் தனது கொள்கை விளக்க உரையில் அவர் கூறியுள்ள விடயங்கள் அவர் மீதான நம்பிக்கையை பொடி பொடியாக உடைத்து விட்டது என்றே கூறவேண்டும்.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்குத் தற்­போ­தைய மாகாண சபை முறைமை ஒரு தீர்­வாக மட்­டு­மல்ல தீர்­வுக்­கான அடிப்­ப­டை­யா­கக்­கூட அமை­யாது என்று தமிழ் மக்­கள் முற்­றி­லு­மாக நிரா­க­ரித்­து­விட்ட நிலை­யில் அந்த மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை என மைத்திரி கூறியிருப்பது இனப்பிரச்சனைக்கான தீர்வாக அரசியலமைப்பு திருத்தம் இனிமேல் முன்னெடுக்கப்பட போவதில்லை என்பதை தெளிவாக சுட்டி காட்டியுள்ளது.

ஆரம்பத்தில் அரசியலமைப்பு திருத்தத்தில் சற்று முனைப்புடன் இருந்த மைத்திரி , திருத்தத்துக்கான இடைக்கால வரைவு வெளியாகியவுடன் சிங்கள பேரினவாதிகள் காட்டிய எதிர்ப்பையடுத்து அந்த முயற்சியில் இருந்து முற்றாகவே பின் வாங்கிவிட்டார் என்றே எண்ண தோன்றுகின்றது.

இல்லையெனில் அது பற்றிய ஒரு சிறு வரியை கூட உள்ளடக்கியிருக்காத கொள்கை தெளிவுபடுத்தல் சாத்தியமாகியிருக்காது.

அதுமட்டுமன்றி மைத்திரி அவர்கள் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை எந்தளவு விளங்கி கொண்டுள்ளார் என்பதையும் அவரின் உரை மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையை முழுமையாகத் தோல்வியுறச் செய்வதற்கு, இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக, சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்று, அந்தக் கொள்கையைத் தோல்வியுறச் செய்வதற்கே தான் முயன்று வந்ததாகவும் கூறியிருக்குறார்.

உரிமைக்காக போராடிய ஒரு இனத்தின் உள்ளார்ந்த அபிலாசைகளை உணர்ந்தவராக அவர்களின் போராட்டத்தின் தேவையை சரியாக அறிந்து கொண்டவராக , அதற்கு பதிலீடான அரசியல் தீர்வை பெற்றுத்தரக்கூடிய ஒரு தலைவர் இவ்வாறன பிழையான எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது தமிழர்களை பொறுத்தவரை பெரும் ஏமாற்றமே.

வழமையாக ஏனைய அரசுகளை போல மைத்திரியும் பயங்கரவாத போர்வைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையை ஒழித்து வைத்து தீர்வு என்னும் விடயத்தில் இருந்து நழுவி செல்லும் போக்கையே தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி , இலங்கை அரசுக்கு முட்டுகொடுத்து வரும் தமிழ் கூட்டமைப்பும் தீர்வு தொடர்பில் எந்தவிதமான அழுத்தத்தையும் பிரயோகிக்க தயங்கி வரும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்கபேரினவாத கொள்கையில் ஊறிய மைத்திரி மட்டும் எம்மாத்திரம்?

Photo Source : dailynews.lk

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு