பாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்

0
955
president maithripala not participate tea party

8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

பாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பெரிதாக எதனையும் கதைக்கவில்லை.

மேலும் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் ஜனாதிபதி, தேநீர் விருந்தில் பங்கேற்காது பாராளுமன்றில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதிக்கும் இடையே தொடர்ந்து காணப்படும் முறுகல் நிலை காரணமாக ஜனாதிபதி தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்துள்ளனர்.

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் ஜனாதிபதி இந்த விருந்தில் பங்கேற்கவில்லை எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை