2018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் 12-வது இடத்தில் உள்ளார்.Economical ranking France Macron place
மேலும், இதில் சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டாமிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
ஜேர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது இடத்திலும், அமேசன் நிறுவனர் ஜெப் பிசோஸ் ஐந்தாவது இடத்திலும், போப் பிரான்ஸிஸ் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
பில் கேட்சுக்கு ஏழாவது இடமும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எட்டாவது இடமும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது இடத்திலும் உள்ளார்.
ஏனைய முக்கிய உலக தலைவர்களில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே 14வது இடத்திலும் உள்ளார்.
**Most related Tamil news**
- பிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்!
- அப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்!
**Tamil News Groups Websites**