ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

0
707
Jaffna Police arrested key suspect group swallowing incident Neyveli

(One arrested heroin drugs)
வெல்லம்பிட்டிய பகுதியில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 604 கிராமும் 920 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளும் 53 ஆயிரத்து 780 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; One arrested heroin drugs