மைத்திரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆசாமி : டுவிட்டர் பதிவால் பரபரப்பு

0
737
president maithripala media unit twitter page hacked

(president maithripala media unit twitter page hacked)
ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறிசேனவின் ஊட­கப் பிரிவு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வது போன்ற டுவிட்டர் பதி­வால் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

சில நிமி­டங்­க­ளில் அந்­தப் பதிவு நீக்­கப்­பட்­டது. ஜனாதிபதி ஊட­கப் பிரி­வுக்­குள் ஊடு­ரு­விய ‘ஆசாமி’ ஒரு­வரே அதைப் பதி­விட்­டுள்­ளார் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால நாடா­ளு­மன்­றில்­ தான் ஆற்­றிய கொள்கை விளக்க உரை­யின் ஒரு பகு­தி­யைப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதி­விட்­டார்.

அந்­தப் பதி­வுக்கு ஜனாதிபதியின் ஊட­கப் பிரிவின் டுவிட்டரில் இருந்து ஒரு பதிவு பதி­வேற்­றப்­பட்­டது.

“நீங்­கள் சிறந்த பேச்­சா­ளர். ஆனால் உங்­க­ளால் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­களை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­து­வீர்­கள்.
செய­லில் காட்­டுங்­கள்” என்று அதில் குறிப்­பிட்­டி­ருந்­தது. இது அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

சில நிமி­டங்­க­ளில் இந்­தப் பதிவு நீக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் விளக்­க­ம­ளித்­துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஜனாதிபதி ஊட­கப் பிரி­வின் டுவிட்டர் பக்கத்தில் ஊடு­ரு­விய ‘ஆசாமி’ ஒரு­வரே அதைப் பதி­விட்­டுள்­ளார் என்று தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் தெரி­வித்­துள்­ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை