(Investigates Rs 675 crore fraud samurdhi bank)
சமுர்த்தி நிதியத்தில் இருந்து 6.75 பில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளதாக பத்திரிகைகளில் நேற்று வெளியான செய்திகள் உண்மையற்றவை என சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொது இயக்குநர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை நிரூபிக்கும் முகமாக விரிவான தகவல் அடங்கிய கடிதம் ஒன்றை பிரதான கணக்காளர், பிரதான உள்ளக கணக்காய்வாளர், இயக்குநர் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரி) மற்றும் இயக்குநர் (நுண்நிதி) அவர்களின் கையொப்பத்துடன் சமூக நலன் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கியில் இருந்து 675 கோடி ரூபா அல்லது 675 சதமாவது காணாமல் போயிருந்தால் அதற்காக எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்ள தயார் என முன்னாள் சமூக நலன் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் மற்றும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கிகளிலுள்ள பணத்தை ஒருபோதும் மோசடி செய்யவில்லை என தான் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறான மோசடி நடைபெற்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை விட்டதற்கு நன்றியை தெரிவிப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைகளை உடனடியாக நடத்துமாறு பிரதமரிடம் கோருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
குறைந்த வருமானம் பெற்றுவரும் குடும்பங்களுக்காக சமுர்த்தி கொடுப்பனவு என செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட 25 பில்லியன் ரூபாயில் 675 கோடி ரூபாய் (6.75 பில்லியன் ரூபாய்) சமுர்த்தி நிதியத்தில் இருந்து காணாமல் போயுள்ளமை தொடர்பில் உயர்மட்ட புலன்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் நிதியமைச்சினால் தொடரப்பட்டிருக்கும் இந்த விசாரணைகள் பிரதமரின் அலுவலகத்தின் நேரடி தலையீட்டில் நடைபெறவுள்ளது.
அமைச்சொன்றில் நடைபெற்ற பணமோசடி தொடர்பாக பிரதமரின் அலுவலகம் நேரடி விசாரணைகள் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்க அமைச்சர் பதவிவகித்த சமூகநலன் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 12 மாத கால பகுதிக்கு சமுர்த்தி கொடுப்பனவுக்காக வரவு செலவு திட்டத்தில் 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாதம் ஒன்றிற்காக 2.08 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இந்த வருடத்தின் முதல் 3 மாதத்தில் சமுர்த்தி நிதியத்தில் 13 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல் அமைச்சு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த பின்னர் அதன் முன்னேற்றம் பற்றிய அறிக்கையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சமுர்த்தி கொடுப்பனவு என்று முதல் மூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக செலவு செய்யப்பட்ட 675 கோடி ரூபா பணம் குறைந்த வருமானமுள்ள எவருக்கும் கொடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சமுர்த்தி கொடுப்பனவுக்கு கூடுதலான 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது என்று கண்டறிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை சமுர்த்தி துறைக்கு பொறுப்பாகவிருந்த எஸ்.பி. திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருந்த உயர் அதிகாரிகள் இருவரை உடனடியாக அந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- யோகேஸ்வரி பற்குணராசாவை எச்சரித்தார் இமானுவேல் ஆனோல்ட்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- இரு கட்சிகளிடையே மோதல்; மூவர் தப்பியோட்டம்
- தமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்
- மாணவனின் புத்தகப் பையில் விஸ்கி போத்தல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- மண்சரிவினால் 87 குடும்பங்கள் பாதிப்பு
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Investigates Rs 675 crore fraud samurdhi bank