(president maithripala media unit twitter page hacked)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற டுவிட்டர் பதிவால் அரசியல் வட்டாரங்களில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்குள் ஊடுருவிய ‘ஆசாமி’ ஒருவரே அதைப் பதிவிட்டுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால நாடாளுமன்றில் தான் ஆற்றிய கொள்கை விளக்க உரையின் ஒரு பகுதியைப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்தப் பதிவுக்கு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் டுவிட்டரில் இருந்து ஒரு பதிவு பதிவேற்றப்பட்டது.
“நீங்கள் சிறந்த பேச்சாளர். ஆனால் உங்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்.
செயலில் காட்டுங்கள்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சில நிமிடங்களில் இந்தப் பதிவு நீக்கப்பட்டது. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய ‘ஆசாமி’ ஒருவரே அதைப் பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தமிழர்களை தாழ்த்தி இனவாதத்தை கக்கிய சிங்கள அதிகாரி : வெகுண்டெழுந்த நாமல்
- மஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..!
- தலைவர் உயிருடன் இருக்கின்றார் : ஏன் டி.என்.ஏ. சோதனை செய்யவில்லை?
- பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த போகிறார் விக்கி : கொந்தளிக்கும் சிங்கள ஊடகங்கள்
- புலிகளின் கொள்கைகளை தோல்வியுறச் செய்வதற்கே முயற்சித்து வருகிறேன் : ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை இதோ!
- சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:president maithripala media unit twitter page hacked,president maithripala media unit twitter page hacked