சட்டவிரோத சிகரெட் தொழிற்சாலை கட்டிடம் தீக்கிரையானது!!

0
603
illegal cigarette factory found burned, illegal cigarette factory found, illegal cigarette factory, cigarette factory found burned, factory found burned, Tamil Netherland news, Netherland Tamil news

(illegal cigarette factory found burned)

திங்கட்கிழமை இரவு பெர்கனில் உள்ள சூம் நகரத்தில், எரிந்த கட்டிடம் ஒன்று சட்டவிரோத சிகரெட்டுகளைக் கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை எரிந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே பல்லாயிரக்கணக்கான பாக்கெட் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

திங்களன்று இரவு Vierlinghweg ஒரு தொழிற்துறை நிலப்பரப்பில் ஒரு வெற்றுக் கட்டடமாகக் கருதப்பட்ட இடத்தில் தீ ஏற்பட்டது. இது பெர்கன் சூம் மீது பெரும் புகை மேகத்தை ஏற்படுத்தியது.

தீ ஏற்பட்ட போது, வெற்றுக் கட்டிடத்தில் தான் தீ பிடித்தது என கருதப்பட்டது. எரிந்ததை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அக்கட்டிடத்திலிருந்து, 10 அல்லது 15 பேர் வெளியே ஓடியதாக தெரிவித்தனர். இத்தீ விபத்து பற்றி யாரும் முறையிடாததால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது என பொலிசார் கூறினர். “எங்களிடம் இருந்த தகவலின் படி, இது ஒரு வெற்றுக் கட்டிடம்” என மேலும் தெரிவித்தனர்.

செவ்வாய் காலை பல பாக்கெட் சிகரெட்டுகளும், பல இயந்திர பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பொலிசாரும், வரி அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர்.

illegal cigarette factory found burned, illegal cigarette factory found, illegal cigarette factory, cigarette factory found burned, factory found burned, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/drunk-trike-driver-dragged-dog/

Tamil News Groups Websites