சென்னை அணியிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்!

0
572

(mark wood ipl 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் மார்க் வூட் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க் வூட் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறித்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 24ம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் தனது வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக, இங்கிலாந்து சென்று, கவுண்டி அணியான துர்ஹாம் அணியுடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

இதன்மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் மார்க் வூட், மும்பை அணிக்கெதிரான முதல் போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தார். இந்த போட்டியில் விக்கட்டுகள் எதுவுமின்றி 49 ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியிருந்தார்.

அதன்பின்னர் மார்க் வூட் சென்னை அணியின் இறுதி பதினொருவரில் இணைக்கப்படவில்லை.

எனினும் தன்னை அணியில் இணைத்தமைக்காக சென்னை அணியின் நிர்வாகத்துக்கு வூட் நன்றியை தெரிவித்துள்ளதுடன், ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>