உங்கள் பெயர் M எழுத்தில் ஆரம்பமாகுதா ?? அப்போ இதை படிங்க

0
766
M letter name people characters today horoscope
shutterstock.com

(M letter name people characters today horoscope)

உலகில் ஒருவர் பிறந்தவுடன், அவரது குணாதிசயங்களை ஏராளமான விஷயங்கள் தெரிவிக்கின்றன. அதில் பிறந்த நேரம் முதல், பெயர் வரை ஒவ்வொன்றும் ஒருவரின் குணம் எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும். இதுவரை நாம் S, V போன்ற எழுத்துக்களின் ஆரம்பமானவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பர் என்று பார்த்தோம்.

இக்கட்டுரையில் M என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது குணங்கள் எப்படி இருக்கும் என பார்க்கப் போகிறோம். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விசுவாசமானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், பாதுகாப்பு உணர்வைத் தருபவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் இவர்கள் வாழ்க்கையில் நடைமுறைக்கேற்றவர்களாக இருப்பார்களாம்.

கவனமாக இருப்பார்கள்
இவர்களுக்கு எப்போதும் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பற்றிய யோசனை இருக்கும். மேலும் தங்களது வாழ்வில் புதிய விஷயங்களை முயற்சிக்க சற்றும் தயக்கம் கொள்ளமாட்டார்கள்.

தார்மீக நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரங்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், தங்களது கலாச்சாரம், பாரம்பரியம், தார்மீக நெறிமுறைகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தன்னம்பிக்கை
இவர்கள் அதிக தன்னம்பிக்கைக் கொண்டவர்கள், இதனால் வாழ்வில் நிறைய வெற்றிகளை காண்பார்கள். பொதுவாக இவர்கள் வேலை சார்ந்த மக்கள் மற்றும் இவர்கள் செய்யும் அனைத்திற்கும் மனதில் திட்டம் போட்டு தான் செய்வார்கள்.

ஆளுமைப் பண்புகள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் ஒழுக்கமானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பார்களாம். மேலும் இவர்கள் நம்பத்தகுந்தவர்களாக இருப்பர்.

ஆக்கிரோஷ குணம்
இந்த வகை மக்கள் தான் வகுத்த எல்லையை ஒருவர் மீறும் போது ஆக்கிரோஷமாகி கொந்தளிப்பார்கள். மேலும் இவர்களது பொறுமையை மட்டும் சோதித்துப் பார்க்க நினைத்தால், அவர்களது கதி அவ்வளவு தான்.

முடிவெடுக்க நேரமாகும்
இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு விரைவில் முடிவு எடுக்கமாட்டார்கள். நன்கு அலசி ஆராய்ந்து, முழு விவரத்தையும் தெரிந்த பின்பே எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள்.

காதலில் எளிதில் விழமாட்டார்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். முக்கியமாக மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனாலேயே இவர்களை காதலில் விழ வைப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும்.

ரொமான்டிக்கானவர்கள்
இந்த மக்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டதோடு, ரொமான்டிக்கானவர்களும் கூட. இது தவிர, இவர்கள் இயற்கையில் மிகுந்த கலைஞர்களாகவும், வாழ்க்கையில் நன்கு அனுபவித்தவர்களாகவும் இருப்பர்.

பிடித்தவர்களுக்காக எதையும் செய்பவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிக்க எதையும் செய்வதோடு, ஆதரவாகவும் இருப்பார்கள்.

Source by : Tamilvoice.com

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:M letter name people characters today horoscope