சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்

0
673
Basel al Assad power continue Syria Tamil news

Basel al Assad power continue Syria Tamil news

சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரானை மிக ஆபத்தான எதிரியாகக் கருதும் இஸ்ரேல், சிரியாவைத் தளமாகப் பயன்படுத்தித் தங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த சிரியாவைப் பயன்படுத்த அதிபர் பசார் அல் ஆசாத் அனுமதித்தால் அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என இஸ்ரேல் மின்துறை அமைச்சர் யுவல் ஸ்டெயின்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் சிரியாவைத் தளமாகப் பயன்படுத்தவிட்டு ஆசாத் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிரியா மீது ஏப்ரல் 9ஆம் நாள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் ராணுவ ஆலோசகர்கள், படைவீரர்கள் 7பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்க ஈரான் தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் கருதுவதால் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Basel al Assad power continue Syria Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :