இதுதான் அடல்ட் காமெடி படமா ?? கொந்தளிக்கு சொல்வேதல்லாம் உண்மை லக்ஸ்மி ராமகிருஷ்ணன்

0
890
Iruttu Araiyil Murattu Kuththu movie controversy Lakshmy Ramakrishnan

(Iruttu Araiyil Murattu Kuththu movie controversy Lakshmy Ramakrishnan )

கடந்த வெள்ளியன்று கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து .படம் முழுக்க இரட்டை அர்த்தங்கள் ,ஆபாச காட்சிகள் என ஆபாசத்தின் உச்சத்தை தொட்ட படம் .இளைஞர்களால் கொண்டாடப்படும் இந்த படம் இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் .இதுவரை 10 கோடி வரை வசூலை அள்ளியுள்ளது .

இருந்தாலும் பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் குணச்சித்திர நடிகை லக்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவுத்துள்ளார் .அதாவது

இந்த சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்புணா்வு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது நல்ல விஷயமில்லை

ஏ படம், நகைச்சுவை படம் என அனைத்து பிரிவுகளிலும் படம் தயாரிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த படங்கள் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். பெண்களை அவமதிப்பதும், இழிவாக பேசுவதும் தான் அடல்ட் காமெடியா? சென்சார் போர்டு இதை எப்படி அனுமதித்தது?

இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய படங்களிலும் அடல்ட் காமெடி காட்சிகள், வசனங்கள் இருந்தன. ஆனால் அவை ரசிக்கும் விதமாகவும், ஆபாசம் இல்லாமலும் இருந்தது. ஆனால் இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் வெறுக்கும் வகையில் அமைந்துள்ளது’ என்று நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Iruttu Araiyil Murattu Kuththu movie controversy Lakshmy Ramakrishnan