ஹர்திக் பாண்டியாவை பாராட்டி தள்ளிய ஜே.பி. டுமினி!

0
651
Hardik Pandya pressure-moment player Duminy

(Hardik Pandya pressure-moment player Duminy)

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாபிரிக்க வீரர் ஜே.பி.டுமினி இந்திய அணியின் முன்னணி சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவின் திறமைகளை பாராட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான டுமினி தற்போது மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய டுமினி ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “ஹர்திக் பாண்டியாவின் திறமைகள் வியக்கத்தக்கவை. அவருக்கு எதிராக போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
தற்போது அவருடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. பாண்டியா ஒரு சிறந்த இளம் சகலதுறை வீரர்.

அதுவும் போட்டியில் அழுத்தமான தருணங்களில் அதிலிருந்து விடுபட்டு விளையாடக்கூடிய வீரர்களில் இவரும் ஒருவர். அழுத்தமான சந்தர்ப்பங்களில் அவருடைய திறமையை சரிவர பயன்படுத்தி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஐ.பி.எல். போன்ற தொடர்களை பொருத்தவரையில் அழுத்தங்களின் போது சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் அணிக்கு முக்கியமாக தேவைப்படுகின்றனர். மும்பை அணிக்கு அதனை பாண்டியா செய்து வருகின்றார். அழுத்தமான தருணங்களில் அணிக்கு தேவையானதை செய்து வருகின்றார். அதில் வெற்றி தோல்விகளை பார்க்கவில்லை. அவரது சிறந்த ஆட்டத்தை பார்க்க கூடியதாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>