ராயுடு மற்றும் ராஹுலுக்கு வாய்ப்பு : இந்திய அணியின் தலைவராகிறார் அஜின்கே ரஹானே!!

0
663
bcci announces squad England tour news Tamil

(bcci announces squad England tour news Tamil)

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் குழாம், இங்கிலாந்து அணிக்கெதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் குழாம், அத்துடன் அயர்லாந்து அணிக்கெதிரான இருபதுக்கு-20 குழாமை இந்திய கிரிக்கெட் நேற்று அறிவித்துள்ளது.

இந்திய அணி ஐ.பி.எல். தொடர் முடிவடைந்தவுடன், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர், அயர்லாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டித் தொடர்களுக்கான அணிக்குழாமை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அணிக்குழாம்களில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வரும் அம்பத்தி ராயுடு, கே.எல். ராஹுல், சிரேயாஷ் ஐயர், தினேஸ் கார்த்திக், சித்தார்த் கவுல், ரெய்னா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் குழாமில் விளையாடி வந்த அஜின்கே ரஹானே, மனிஷ் பாண்டி, கேதார் ஜாதவ் (உபாதை) மொஹமட் சமி, சர்துல் தாகூர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு கே.எல்.ராஹுல், அம்பத்தி ராயுடு, வொஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென்னாபிரிக்க அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் விளையாடிய அக்ஷர் பட்டேல், ஜெயதேவ் உனாட்கட் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் இடத்துக்கு வொஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ரோஹித் சர்மாவும் குறித்த குழாமில் பெயரிடப்படவில்லை.

  • ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் குழாம்

அஜின்கே ரஹானே (தலைவர்), சிக்கர் தவான், முரளி விஜய், கே.எல்.ராஹுல், கருண் நாயர், விரிதிமன் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், மொஹமட் சமி, ஹர்திக் பாண்டியா, இசான் சர்மா, சர்துல் தாகூர்.

  • அயர்லாந்து அணிக்கெதிரான இருபதுக்கு-20 குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), சிக்கர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராஹுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டி, மகேந்திர சிங் டோனி, தினேஸ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

  • இங்கிலாந்து அணிக்கெதிரான இருபதுக்கு-20 குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), சிக்கர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராஹுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டி, மகேந்திர சிங் டோனி, தினேஸ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்

  • இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), சிக்கர் தவான், ரோஹித் சர்மா, சிரேயாஷ் ஐயர், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்

<<Tamil News Group websites>>

bcci announces squad England tour news Tamil, bcci announces squad England tour news Tamil, bcci announces squad England tour news Tamil