மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத அவுஸ்திரேலிய வீரர்! : மனமுடைந்த ரசிகர்கள்! : காரணம் என்ன?

0
679
Andrew Tye emotional IPL 2018 news Tamil

(Andrew Tye emotional IPL 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரின் பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இதில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியிருந்தாலும், அந்த அணிசார்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட என்ரு டை 34 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் இம்முறை ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 16 விக்கட்டுகளை வீழ்த்தி என்ரு டை முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

இந்நிலையில் போட்டியின் இடையில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தியதற்காக, அவருக்கான ஊதா நிறத் தொப்பி வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த என்ரு டை,

“எனது பாட்டி இன்று இறந்துவிட்டார். இந்த ஆட்டத்தை எனது பாட்டிக்கும், எனது குடுப்பத்துக்கும் சமர்ப்பணமாக்குகிறேன். இந்த போட்டியானது என் வாழ்வில் அதிக உணர்ச்சிவசமான போட்டியாகும். இந்த நாள் எனக்கு ஒரு கடுமையான நாளாக அமைந்துவிட்டது. நான் கிரிக்கெட்டை அதிகமாக விரும்புகிறேன்” என அத்தனை ரசிகர்களுக்கு மத்தியில் கண்ணீருடன் தெரிவித்தார்.

என்ரு டை பாட்டியின் நினைவாக தனது இடதுகையில் “GRANDMA” என்று எழுதப்பட்ட கறுப்பு நிற பட்டி ஒன்றை அணிந்து, விக்கட்டுகள் பெறப்பட்ட சந்தர்ப்பங்களில் அதனை முத்தமிடுவதுமாக இருந்தமையை அனைவராலும் பார்க்க முடிந்தது.

<<Tamil News Group websites>>