மஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..!

0
2963

(mahinda rajapaksa said public try attack )
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காலி சமனல மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

நாட்டில் அண்மையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட நாட்களில் நான் எனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

எரிபொருள் பெற பொது மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

நான் அந்த வழியில் செல்வதை அவதானித்த குறித்த நபர்கள் எனது வாகனத்தை வழிமறைத்து தாக்க முயற்சித்தனர். அந்த சம்பவம் இடம்பெற்ற போது சற்று மாலை நேரமாக இருந்தது. இதனால் பொது மக்கள் ரணில் என நினைத்து “ரணில் எங்களுக்கு எரிபொருளை கொடுத்து விட்டு செல்” என சத்தமிட்டனர்.

நான் உடனடியாக வாகனத்தின் ஜன்னலை கீழே இறக்கிவிட்டு “நான் ரணில் அல்ல” என தெரிவித்தேன். “சேர் நீங்களா? மன்னித்து விடுங்கள்… நாங்கள் ரணில் என நினைத்தோம்” என மஹிந்த கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:mahinda rajapaksa said public try attack , mahinda rajapaksa said public try attack