மெட்ரிட் ஓபன் : இரண்டாவது சுற்றில் நடாலுடன் மோதும் மொன்பில்ஸ்

0
218
Madrid Open 2018 Gael Monfils news Tamil

(Madrid Open 2018 Gael Monfils news Tamil)

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பிரான்சின் கெயல் மொன்பில்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கெயல் மொன்பில்ஸ், ஜோர்ஜியாவின் நிக்கோலஷ் பெஷிலஷ்விலியை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் தடுமாற்றத்துக்கு மத்தியில் ஆடிய மொன்பில்ஸ், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய மொன்பில்ஸ், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். எனினும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மொன்பில்ஸ் 6-3 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

மொன்பில்ஸ் தனது இரண்டாவது சுற்றில், ஸ்பெயினின் முன்னணி வீரர் ரபேல் நடாலை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

Madrid Open 2018 Gael Monfils news Tamil