உம்ரா செல்வதற்க விசா கட்டணத்தை குறைக்க கோரி சவுதி அரசுக்கு கடிதம்

0
656
Letter Saudi government demanding reduce visa fees Tamil news

(Letter Saudi government demanding reduce visa fees Tamil news)

உம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது உம்ரா ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்களால் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி நாட்டில் உள்ள புனித தலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் சிறுபான்மையின நலத்துறை முன்னாள் அமைச்சருமான முகமது ஆரிப் நசீம் கான் சவுதி அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் விமான கட்டணங்கள் வெகுவாக உயர்த்தப்பட்டதில் 35 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் 52 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதனுடன் 2-வது முறையாக உம்ரா செல்ல விசா கட்டணமும் 35 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் உம்ரா பயணம் மேற்கொள்ளும் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் மிகவும் சிரமப்படுகின்றனர். கட்டண மிகுதியால் பலர் உம்ரா பயணத்தை கைவிடும் நிலை ஏற்படுகிறது. விசா மற்றும் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து ரூ.68,000 வரை செலவாகிறது. எனவே சவுதி அரசு விசா கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

(Letter Saudi government demanding reduce visa fees Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :