உபாதையால் வெளியேறுகிறார் லொரொன்ட் கொசில்னி!

0
647
laurent koscielny injury news Tamil update

(laurent koscielny injury news Tamil update)

அர்செனல் அணியின் வீரர் லொரொன்ட் கொசில்னி (பிரான்ஸ்) ஆறு மாதங்களுக்கு போட்டிகளில் விளையாட மாட்டார் என அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளர் அர்சென் வெங்கர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதியின் இரண்டாவது லீக் போட்டியில் அர்செனல் அணி 1-0 என அட்லாண்டிகோ மெட்ரிட் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்த போட்டியின் போது லொரொன்ட் கொசில்னி மைதானத்தில் தவறிவிழுந்தார். இதில் அவரது காலில் பலத்த உபாதை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதானத்திலிருந்து லொரொன்ட் கொசில்னி வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் உதைப்பந்தாட்ட சம்மேளனம் லொரொன்ட் கொசில்னி ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலககக்கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவித்தது.

தற்போது லொரொன்ட் கொசில்னியின் உபாதை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அர்செனல் அணி நிர்வாகம், அவர் 6 மாதங்கள் வரையில் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளது.

லொரொன்ட் கொசில்னிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சத்திரசிகிச்சை குணமடைவதற்கு 6 மாதங்களாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>