எதிர்க் கட்சியில் அமர்ந்த 16 உறுப்பினர்கள்..!

0
734
slfp 16 members seated Opposition side

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றின் எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ளனர்.
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.
இதன்போதே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர்ந்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக குறித்த 16 பேரும் வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த 16 பேரின் அமைச்சு இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததோடு, அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் சமர்ப்பித்தனர்.

எனினும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மீளப்பெற்றுக்கொள்ளுமாறு பணித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த 16 பேரும் தங்களது அமைச்சு, இராஜாங்க அமைச்சு பிரதி அமைச்சு பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்து பதவி விலகல் கடிதத்தினையும் வழங்கினர்.

இவ்வாறிருக்க விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 16 பேரும் ஆளும் தரப்பிற்கு எதிராக செயற்படவுள்ளமையினால் எதிர்தரப்பில் ஆசனங்களை தயார் செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் எதிர் தரப்பில் குறித்த 16 பேரும் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:slfp 16 members seated Opposition side, slfp 16 members seated Opposition side