கோலாலம்பூர், சிங்கப்பூர் ரயில் சேவையில் முக அடையாளத் தொழில்நுட்பம் அறிமுகம்

0
684

(Introduction facial identification technology )

கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் சேவையின் ஓர் அங்கமாக, முக அடையாளத் தொழில்நுட்பத்தை ஜப்பான் வழங்க முன்வந்துள்ளது.

அந்த ரயில் திட்டத்துக்கான குத்தகையைப் பெற ஜப்பான் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இப் புதிய தொழிநுட்பமும் அடங்கும்.

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும்  இடையே பயணம் செய்வோர், குடிநுழைவுச் சோதனைகளைக் சுமுகமாகக் கடந்துசெல்வதை இத் தொழில்நுட்பம்  உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநுழைவுச் சோதனைகளுக்குப் பயணிகள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், அதிவிரைவு ரயில் சேவை செயல்திறன்மிக்கதாக இருக்காது.

அதோடு , அது பயணிகளுக்குப் பயன்தராது  என மலேசியாவுக்கான ஜப்பானியத் தூதர் மாக்கியோ மியாகாவா தெரிவித்துள்ளார்.

மேலும் , இச் சேவையில் இதுவரை ஒரு விபத்தும் ஏற்பட்டதில்லை. கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்திற்கான குத்தகையை ஜப்பான் கைப்பற்ற அந்த அம்சமும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் , அந்த ரயில் கட்டமைப்புக்குச் சுமார் 12 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

tags:-Introduction facial identification technology

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**