ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்

0
938
Danger Ravana Ella Falls Warning tourists

(Danger Ravana Ella Falls Warning tourists)
சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரியளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன்காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரியளவு நீர் அதிகரித்துள்ளதுடன், ஏனைய நாட்களை விட அதிக நீர் வெளியேறிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் எல்ல நீர்வீழ்ச்சிக்குச் செல்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குளிக்கச் சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Danger Ravana Ella Falls Warning tourists