சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?

0
2282
cv wigneswaran relative vasudeva nanayakkara

(cv wigneswaran relative vasudeva nanayakkara)
தென்னிலங்கையில் சிங்கள இனத்துடன் சம்மந்தம் வைத்திருக்கின்ற விக்னேஸ்வரன் போன்றவர்கள் எல்லாம் எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி தொடர்பில் ஊடகவியாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் அவர்கள் தென்னிலங்கையை அடிப்படையாக கொண்டவர். நாடு சுதந்திரம் பெற்ற போது தென்னிலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான் தமிழரையும், உரிமையையும் கொழும்பில் அடகு வைத்திருந்தார்கள்.

பிரித்தானியர் சுதந்திரம் வழங்கிய போது தமிழருக்கும் தனியான ஆட்சி அலகு தேவை என கோரியிருந்தால் நிச்சயமாக கிடைத்திருக்கும். அல்லது சமஸ்டி முறையிலான ஒரு யாப்பு வகுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தவறவிட்டது தென்னிலங்கையின் தமிழ் தலைமைகள். அந்த நேரத்தில் அவர்கள் தான் எம்மை ஆண்ட ஆதிக்க சக்திகளாக இருந்தனர். அவர்கள் அந்நியரின் கைளில் துவண்டு போய் இருந்தார்கள்.

விக்னேஸ்வரன் தற்போது வெளியேறி புதிய கட்சி தொடங்கினால் அவரது முகம் உடைத்தெறியப்பட்டு உண்மை வெளிவரும். பொய்மையின் வெளிப்பாட்டில் தான் அவரது செயற்பாடுகள் இதுவரை இருந்தது. ஆன்மீகம் என்ற ஒரு பூச்சு பூசிக் கொண்டு அவரது செயற்பாடுகள் தவறாகவே இருந்தது.

வடமாகாண சபையில் இதுவரை எத்தனை கணக்காய்வு அறிக்கைகள் வந்தது. கணக்காய்வு அறிக்கைகளைக் கூட ஒழுங்காக செய்யவில்லை. தனது கடமைகளை சரியாக செய்யவில்லை. நிர்வாகத்தை சரியாக செய்யவில்லை.

அப்படியான இவர் தமிழ் மக்களை உருக்குலைக்க முற்படக் கூடாது. பெற்றுக் கொண்ட பதவியை சரியாக நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்ற முடியாவிட்டால் ஒதுங்கி நின்று பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:cv wigneswaran relative vasudeva nanayakkara, cv wigneswaran relative vasudeva nanayakkara