டச்சு மொழி பேசாதோருக்கு இனி பாரில் இடமில்லை

0
762
non dutch speakers entry restricted, non dutch speakers entry, non dutch speakers, dutch speakers entry restricted, speakers entry restricted, Tamil Netherland news, Netherland Tamil news

(non dutch speakers entry restricted)

டச்சு மொழி பெசாதோர் இனி Tiel இல் அமைந்திருக்கும் De Tijd மற்றும் De Kikker பார்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதி அனைவருக்கும் பொருந்தும். புலம்பெயர்ந்த போலிஷ் தொழிலாளர்களால் இடம்பெற்ற சிக்கலே இந்த புதிய நடைமுறைக்கான காரணம், என இணை உரிமையாளர் Christjan Ernste கூறினார்.

பார்களுக்குள் வருபவர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டி ‘goedenavond’ (டச்சு மொழியில் – மாலை வணக்கம்) என்று சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல முடியாதவர்கள் பார்களுக்குள் நுழைய முடியாது. டச்சு மொழியில் பேசும் மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய வெளிநாட்டு மக்கள் இன்னும் வரவேற்கப்படுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்வதே எங்களின் இந்த நடைமுறையின் நோக்கம், என்றார் Christjan Ernste.

Tiel இன் மேயர் Hans Beenakker, புலம்பெயர்ந்த போலந்து  தொழிலாளர்கள் நடத்தை பற்றி விருந்தோம்பல் துறையில் புகார் இருப்பதாக உறுதிப்படுத்தினார். “ஒரு சில சம்பவங்கள்” மட்டுமே பொலிஸ் நிலையத்தில் பதிவாகி உள்ள நிலையில், “விருந்தோம்பல் துறையில் மிக அதிகமாகன பிரச்சினைகள்” பதிவாகி உள்ளன என பொலிசார் கூறினர்.

non dutch speakers entry restricted, non dutch speakers entry, non dutch speakers, dutch speakers entry restricted, speakers entry restricted, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/mother-child-jumping-called-help/

Tamil News Groups Websites