சிறுமியை துஷ்பிரயோகம் செய்து உயிரோடு எரித்த கொடூரம் : இந்தியாவில் அதிர்ச்சி

0
1080
India girl, 16, burnt alive Jharkhand rape

(India girl, 16, burnt alive Jharkhand rape)
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தீ வைத்துக்கொளுத்திய கொடுமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினமும் அரங்கேறுகின்றன.

டெல்லியில் இந்த வருடத்தின் மூன்றரை மாதங்களில் மட்டும் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில், ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கடந்த மாதம் 15ஆம் திகதி வரை, 578 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ஜார்க்கண்டில் நேற்றிரவு 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் பகுர் மாவட்டத்தில் உள்ள கன்கர்போனா பகுதியில் உள்ள தனது வீட்டில் 16 வயது சிறுமி நேற்று தனியாக இருந்தார்.

இதைக் கண்ட உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்குள் நுழைந்தார்.
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவரை கொல்ல நினைத்து அவர் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.

அந்தச் சிறுமி, உயிர் பயத்தில் அலறி கதறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மேற்கு வங்கத்தில் உள்ள மால்ட் வைத்தியசாலைக்கு அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ நிவாரணமாக ரூ.20 ஆயிரத்தை பகுர் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
தப்பியோடிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:India girl, 16, burnt alive Jharkhand rape, India girl, 16, burnt alive Jharkhand rape