இலங்கை தொழிலாளர் காங்ரசின் 79 வது மே தின நிகழ்வு

0
764
Ceylon workers congress may day leader arumugan thondaman

Ceylon workers congress may day leader arumugan thondaman
இலங்கை தொழிலாளர் காங்ரசின் 79 வது மே தின நிகழ்வு இன்று (07) காலை 11மணிக்கு இ.தொ.கா.வின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது இ.தொ.கா.வின் மேதின பேரணியானது நுவரெலியா சினிசிட்டா நகரசபை மண்டபத்தின் அருகாமையில் ஆரம்பிக்கபட்டது.

குறித்த பேரணி நுவரெலியா அஞ்சல் நிலையம் வரை இடம்பெற்றதுடன், ஏனைய இரண்டு பேரணிகளில் ஒன்று நுவரெலியா வியாபார மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அடுத்த பேரணி நுவரெலியா ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மூன்று பேரணிகளும் நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்கு அருகில் ஒன்றிணைந்து நுவரெலியா வாகன தரிப்பிடத்தில் அமைக்கபட்டுள்ள பிரதான மேடையை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த இ.தொ.கா.வின் மே தின பேரணியில் இ.தொ.கா. தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், சமுக நலன்புரி ஆரம்ப கைதொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார் , சக்திவேல், பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Ceylon workers congress may day leader arumugan thondaman

More Tamil News

Tamil News Group websites :