இன்றைய ராசி பலன் 06-05-2018

0
681
Today horoscope 06-05-2018

மேஷ ராசி நேயர்களே !
நியாய தர்மத்துடன் செயல்படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

ரிஷப ராசி நேயர்களே !
சாதுர்யமாக செயல்பட்டு வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம் ராசி நேயர்களே !
நன்றி மறந்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் முயற்சி தெவை. லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

கடக ராசி நேயர்களே !
விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். திடீ்ர் செலவால் சேமிப்பு பணம் கரையும். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தினரின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்

சிம்ம ராசி நேயர்களே !
சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

கன்னி ராசி நேயர்களே !
மனக்கஷ்டம் தீர தெய்வ வழிபாடு உதவும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வேண்டாம். வீடு, வாகன வகையில் திடீர் செலவு உண்டாகும்.

துலாம் ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம் ராசி நேயர்களே !
மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

தனுசு ராசி நேயர்களே !
சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

மகர ராசி நேயர்களே !
திட்டமிட்ட பணி இடையூறு இல்லாமல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.

கும்பம் ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உருவாகும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய பணி, இடமாற்றம் வந்து சேரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் ராசி நேயர்களே !
பொது இடத்தில் வீண் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் அறிந்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்