இதுவே சிறந்த ஆரம்பமாகும்

0
571
thirteen amendment supper start national problem solution

thirteen amendment supper start national problem solution
13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிச்செல்வதற்கு சிறந்த ஆரம்பமாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களிடமும், சர்வதேச சமூகத்தினரிடமும் இதையே வலியுறுத்தி வருகின்றேன்.

போதிய அரசியல் பலம் எமக்கு கிடைத்திருந்தால் நாம் அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருப்போம்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து கட்டம் கட்டமாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு நோக்கி முன்னேறுவதே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

அதேகாலப் பகுதியில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்கள் கேட்கும் உரிமையின் நியாயத்தை நடைமுறையில் உணர்த்தி அவர்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
thirteen amendment supper start national problem solution

More Tamil News

Tamil News Group websites :