வயோதிபர் பலி

0
515
north old men accident dead today Tamil latest news

north old men accident dead today Tamil latest news
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வேகமாக வந்த வாகனமொன்று மோதியதில் படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரத்தை சேர்ந்த 80 வயதுடைய தோமையான் அந்தோணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்ப பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
north old men accident dead today Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :