131 இலங்கையர்கள் மலேசிய பொலிசாரால் கைது

0
496
gun men arrest foreign product galkissa Tamil latest news

Malaysia police arrest Lankan asylum seeker Tamil latest news
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்திற்கு செல்ல முயற்சித்த 131 இலங்கையர்கள் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

(நுவுசுயு) எனப் பெயரிடப்பட்டுள்ள கப்பலில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் ஒன்பது சிறுவர்கள் என 131 இலங்கையர்களை ஏற்றிச் சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய ஐந்து மலேசியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் ஒரு பாரிய மனித கடத்தலை ரோயல் மலேசிய பொலிஸார் வெற்றிகரமாக தோல்வியடையச் செய்துள்ளதாக பொலிஸ் பிரதானி மொஹமட் ஹருன் தெரிவித்துள்ளார்.
Malaysia police arrest Lankan asylum seeker Tamil latest news

More Tamil News

Tamil News Group websites :