மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

0
515
land slide one men dead two brothers hose television nawalapitiya

land slide one men dead two brothers hose television nawalapitiya
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்ணிற்குள் புதையுண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சகோதரர்கள் இருவர் தனது வீட்டின் விராந்தையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தீடிரென வீட்டின் அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதில் மண்மேட்டில் சிக்குண்ட இருவரில் தம்பி மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் மண்ணில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் லஹிரூ கமகே என்ற 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
land slide one men dead two brothers hose television nawalapitiya

More Tamil News

Tamil News Group websites :