வாய்பேசமுடியாத இளைஞர்பலி

0
459
ephant attack east province sixty two years old latest

cant speak train accident twenty seven years old latest Tamil news
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் வாய்பேசமுடியாத காது கேற்காத நிலையில் தண்டவளம் ஊடாக சென்றவாரே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு உயிருக்கு போராடிய நிலையில் புகையிரத நிலைய ஊழியர்களினால் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
cant speak train accident twenty seven years old latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :