tea rubber coconut labor land specialist Tamil latest news
கண்டி மாவட்டத்தில் உள்ள ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தாபனத்திலிருந்து 15ஆயிரம் காணித் துண்டுகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 30 மில்லியன் நிதியொதுக்கீட்டின் மூலம் கலஹா – புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 தனிவீடுகள் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.
அமைச்சர்களான பழனி திகாம்பரம், லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்திட்டம் எதிர்வரும் ஜீன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் மாதம் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 15ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றுள் 2ஆயிரம் வீடுகள் எதி;ர்வரும் ஜுன் மாதம் பிரதமர் தலைமையில் கையளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
tea rubber coconut labor land specialist Tamil latest news