(fooled poor people Congress election Indira Gandhi)
இந்திரா காந்தியின் காலத்திலிருந்து காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற ஏழை மக்களை முட்டாளாக்கியுள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் துமாகுரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கர்நாடக மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். இதன் மூலம் பா.ஜ.கவின் வெற்றி தெரிய வருகிறது. தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வறுமை கோடு விவகாரத்தை பயன்படுத்துகிறது. இந்திரா காலம் முதல் வறுமை குறித்து அக்கட்சி பேசி வருகிறது.
ஆனால்இ ஏழை தாய் ஒருவரின் மகன் பிரதமரான பின்னர், வறுமையை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டது. இனிமேலும் மக்களை முட்டாளாக்க முடியாது என அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இந்திரா காலம் முதலே தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏழை மக்களை காங்கிரஸ் முட்டாளாக்கி வருகிறது. அது பொய்கள் நிரம்பிய கட்சி. வாக்குக்காக தொடர்ச்சியாக பொய் சொல்கின்றனர். விவசாயிகள் பற்றியும் ஏழைகள் குறித்தும் அக்கட்சிக்கு கவலை கிடையாது.
காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் அதிக காலம் ஆட்சியில் விவசாயிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் நிறைவு பெறவில்லை. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. விவசாயிகளுக்கு உழைக்க காங்கிரசுக்கு அதிக நேரம் இருந்தது. ஆனால் எதுவும் செய்யவில்லை.
70 ஆண்டுகளாக ஏழைகளை புறக்கணித்த காங்கிரஸ் அவர்களை தற்கொலை செய்யும் நிலையை உருவாக்கியது.
வாக்கு வங்கி அரசியல் செய்யும் அக்கட்சி வளர்ச்சி பற்றி சிந்தித்தது இல்லை. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற ஏழை மக்களை முட்டாளாக்கியுள்ளது.
50 ஆண்டுகளில் இல்லாததை பா.ஜ.க. 50 மாதங்களில் செய்துள்ளது. ரகசிய கூட்டணி அனைத்து கருத்து கணிப்புகளும் மதசார்பற்ற ஜனதா தளம் 3ஆவது இடத்தில் தான் வரும் என கூறுகின்றன. உண்மையை பேச காங்கிரசுக்கு தைரியம் வேண்டும்.
ஐக்கியஜனதா தள கட்சியுடன் ஒப்பந்தம் உள்ளது என அக்கட்சியால் கூற முடியுமா? காங்கிரசும்இ மதசார்பற்ற ஜனதா தளமும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அக்கட்சியால் காங்கிரசை வீழ்த்த முடியாது. பா.ஜ.கவுக்கு மட்டுமே அந்த திறமையுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
(fooled poor people Congress election Indira Gandhi)
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு