அபிவிருத்திகளை மக்கள் விரைவில் உணர்வார்கள்

0
500
prime minister speech development very soon people understand

prime minister speech development very soon people understand
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பிரதி பலன்களை மக்களால் எதிர்காலத்தில் உணர முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரகம, மில்லணிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவிததுள்ளார்.

அரசாங்கம் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சிலர் கூறிவருகின்றனர்.

எனினும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை உடனடியாக எவராலும் உணர்ந்து கொள்ள முடியாது.

அதற்கு சிறிது காலம் செல்லும் என்பதனால் கட்சி பேதமின்றி அந்த அபிவிருத்திப் பணிகளை தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
prime minister speech development very soon people understand

More Tamil News

Tamil News Group websites :