ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன பதக்கம் கண்டுபிடிப்பு

0
760
Lost medal Dr.Lester James Peiris found inside private bus

(Lost medal Dr.Lester James Peiris found inside private bus)
கடுவெல கொள்ளுப்பிட்டி தனியார் பேரூந்து ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில், காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி நிகழ்வில் ரணமயுர பதக்கம் காணாமல் போனது.

கம்பெரலிய சிங்கள திரைப்படத்துக்காக கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

லெஸ்டர் ஜெம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது இந்த பதக்கம் அவரது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தது.

இதனைத் தேடி பொலிஸார் பல மட்டங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கொள்ளுப்பிட்டி பகுதியில் தனியார் பேரூந்தில் இருந்து குறித்த பதக்கம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Lost medal Dr.Lester James Peiris found inside private bus