நாடு திரும்பிய தென்னாபிரிக்க வீரர்! : பெங்களூர் அணிக்கு பலத்த அடி!!!

0
614
ab de villiers quinton de kock IPL 2018 News Tamil

(ab de villiers quinton de kock IPL 2018 News Tamil)

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமாயின் பெங்களூர் அணிக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் அவசியம்.

இந்நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் ஏபி டி வில்லியர்ஸ் இன்று விளையாடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதுமாத்திரமின்றி டி கொக் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கான பதிலை பெங்களூர் அணியின் பயிற்றுவிப்பாளர் டேனியல் விட்டோரி வெளியிற்றுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “ஏபி டி வில்லியர்ஸ் பூரண குணமாகியுள்ளார். நடைபெறவுள்ள சென்னை அணிக்கெதிரான போட்டியில் வில்லியர்ஸ் விளையாடுார். எனினும் இன்றைய போட்டியில் குயின்டன் டி கொக் விளையாட மாட்டார். திருமணம் ஒன்றிற்காக அவர் நாடுதிரும்பியுள்ளார். எனினும் அடுத்த போட்டிகளில் கொக் விளையாடுவார்” என தெரிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோர் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். அதிலும் டி வில்லியர்ஸ் 6 போட்டிகளில் விளையாடி 280 ஓட்டங்களை குவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>