ஜெயகலாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில்

0
493
auto young mother die travailing try abuse three wheel driver

auto young mother die travailing try abuse three wheel driver
மத்துகம – வோகன் தோட்டம் மேற்பிரிவைச் சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டியின் சாரதி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தொன்றின் காரணமாகவே குறித்த யுவதியின் மரணம் சம்பவித்ததாக, பிரேதபரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, மத்துகம காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update

மத்துகமவில் இருந்து கடந்த 29 ஆம் திகதி தமது ஊருக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த போது, தாம் இறங்க வேண்டிய இடத்தைக் கடந்தும் முச்சக்கர வண்டி நிறுத்தப்படாததால் அவர் அதில் இருந்து குதித்ததால் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மத்துகமை நகரத்தில் தினசரி வேதனத்திற்கு கடமையாற்றும் 28 வயதுடைய தாயொருவர் வேலையை நிறைவு செய்துக்கொண்டு முச்சக்கரவண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளார்.

குறித்த தாய் வழமையாக செல்லும் முச்சக்கரவண்டியிலேயே அன்றும் பயணித்துள்ளார்.

அவர் பயணித்த முச்சக்கரவண்டி மத்துகமை நகரத்தின் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.

இந்நிலையில் , 28 வயதுடைய குறித்த தாயை இறக்கவேண்டிய இடத்தினை தவிர்த்து அவரது வசிப்பிடத்தையும் கடந்து முச்சக்கரவண்டி வேகமாக பயணித்துள்ளது.

அச்சமுற்ற 2 பிள்ளைகளின் தாயான அவர் கூச்சலிட்டு நிறுத்துமாறு கோரியும் முச்சக்கரவண்டி சாரதி நிறுத்தாமல் சென்றுள்ளார்.

தனது பிள்ளைகளை கவனத்திற்கொண்டு தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள குறித்த தாய் முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்த தாய்க்கு கடுமையாக உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மக்கள் கூச்சலிட்டதினை தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிறிதொரு முச்சக்கரவண்டியின் சாரதியின் உதவியுடன் குறித்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் , மூன்று கிலோ மீற்றர் வரையிலான தூரமே மருத்துவமனைக்கு காணப்படுகின்ற போதிலும் படுகாயத்திற்கு உள்ளான தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

உறவினர்களின் கோரிக்கைக்கு இணங்க அயலவர்களின் உதவியுடன் தாயை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன

இந்நிலையில் , தாய் மரணமடைந்த நிலையில் வீதியின் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகாலில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் இந்த இளம் தாயின் மரணத்துடன் ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களை நோக்கினால் இது மூன்றாவது சம்பவமாகும்.
auto young mother die travailing try abuse three wheel driver

More Tamil News

Tamil News Group websites :