கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகள்

0
499
home friars deputy minister last three years latest tamil news

home friars deputy minister last three years latest tamil news
நாட்டுக்காக பல்வேறு வெற்றிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் வென்றெடுக்க அரசாங்கத்தால் முடிந்ததாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்சமயம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதன் போது உள்நாட்டு கட்டுமாணத்துறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். ஊடக சுதந்திரம் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தி காரணமாக நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் பெரும்பாலான எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்ப்பார்த்திருந்தாலும், அதுபற்றி மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்று பிரதி அமைச்சர் ஜே.சி அலவத்துவல கூறினார்.
home friars deputy minister last three years latest tamil news

More Tamil News

Tamil News Group websites :