உத்தரவாத விலையில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

0
853
minister sarath amunugama criticize movement Lankan freedom party

recommendation vegetable price minister sarath amunugama
மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழில்நுட்ப,ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவைக்க அமைச்சர் அமுனுகம நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உத்தரவாத விலையில் பொருட்களை கீல்ஸ் மற்றும் கார்கில்ஸ் பூட்சிற்றி நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விற்பனை தொடர்பில் உள்ள சிக்கல்களையும் தீர்த்து வைக்க அமைச்சர் அமுனுகம தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
recommendation vegetable price minister sarath amunugama

More Tamil News

Tamil News Group websites :