மொத்தப் பெறுமதி 360 கோடி டொலர்களுக்கும் அதிகமாகும்.

0
668
three wheel drivers age limit again minister mangala samaraweera

finance minister mangala samaraweera Asian development bank
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மெனிலாவில் தற்பொழுது இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 51ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த செயல்திட்டங்களின் மொத்தப் பெறுமதி 360 கோடி டொலர்களுக்கும் அதிகமாகும்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வசதிகளை வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் வறுமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற செயல்திட்டங்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
finance minister mangala samaraweera Asian development bank

More Tamil News

Tamil News Group websites :