பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் – சந்திரபாபு

0
568

(urged hanging sexual assaults against women)

 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என இந்திய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை சிறுமியொருவர் 55 வயது நபரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். படு காயத்துக்குள்ளான குறித்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு அதுவே கடைசி நாளாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்களை நாம் உறுதியான முறையில் கையாள வேண்டும். வீதியில் செல்லும் போது பெண்கள் இதுபோன்றவர்களை பார்த்தால் அவர்கள் முகத்தில் எச்சில் துப்பவேண்டும். அதே சமயம் அருகில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்.

மேலும்இ பாதிக்கப்பட்ட இந்த சிறுமியின் எதிர்காலத்திற்காக அவள் பெயரில் 5 இலட்சம் ரூபா வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அவரது தந்தைக்கு 2 ஏக்கர் விவசாய நிலம், வீடு மற்றும் வேலை வழங்கப்படும்.

தனிப்பட்ட முறையில் சிறுமி நல்ல நிலைக்கு செல்லும் வரை அவளது பாதுகாவலராக இருந்து கல்விக்கு பண உதவி செய்வேன்’ என சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேற்று தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

(urged hanging sexual assaults against women)

Tamil News Group websites :