மீண்டும் சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் ‘கொஞ்சும் தமிழ் பேசும் அழகி’ டிடி

0
1926
Vijay TV Program Host Divya Darshini Back show

(Vijay TV Program Host Divya Darshini Back show)

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருந்த ‘டிடி’ என்கிற திவ்யதர்ஷினி மீண்டும் சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.இவரின் ‘Koffee With DD’ என்ற நிகழ்ச்சியை யாரும் மறந்து விட முடியாது. எந்த பிரபலம் என்றாலும் மிகவும் தைரியமாக பேசி அவர்களிடம் நற்பெயர் வாங்கும் திறமை கொண்டவர்.மேலும் தமிழ் நாட்டில் உள்ள பெண் தொகுப்பாளர்களிலேயே மிகவும் பிரபலயமான தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். இவருக்கு என்றே உலகம் முழுக்க ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் அசாத்தியமான திறமை, அழகு, பேசும் கொஞ்சும் தமிழ், என்று இவரை ரசிக்காதவர்கள் வெகு சிலரே.கேரளாவை பிறப்பிடமாக கொண்ட டிடி விஜய் டிவியில் தனது கலைத்துறையை ஆரம்பித்த டிடி படிப்படியாக தனது விடாமுயற்சியினால் எவரும் நினைத்துப்பார்க்க முடியாத இடத்தை தொட்டுவிட்டார்.எப்போதும் சிரித்த முகம், இவர் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பது என்று இவருடன் நிகழச்சியை தொகுத்து வழங்க முன் நிற்பார்கள் என்றே சொல்லலாம்.

2014 ஆம் ஆண்டு தனது பள்ளி பருவத்தில் இருந்து நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்து தமிழ் நாட்டின் மருமகளானார். பின்னர் சில காலம் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி குடும்பம், வீடு என்று இருந்தார்.இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட சில குடும்ப தகராறுகளால் அவரை பிரிந்து வாழ்ந்தார். சமீபத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற இவர் மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

உடலழகை மேலும் மெருகேற்றி, மிகவும் கவர்ச்சி ஆடைகள் அணிந்து, சின்னத்திரையை கலக்கி வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை திரையில் மீண்டும் பார்ப்பதை நினைத்து சந்தோசத்தில் உள்ளனர்.

Tag: Vijay TV Program Host Divya Darshini Back show