விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்

0
1492
Using deceased doctor name Financial fraud private banks

(Using deceased doctor name Financial fraud private banks)
திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி, தனியார் வங்கிகளில் நிதி மோசடி செய்த குழுவொன்றின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து, மூன்று தனியார் வங்கிகளில் இருந்து சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான பணம் கடனாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில், இரண்டு வைத்தியர்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்று செயற்பட்டுள்ளமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒரு வர்த்தகர் என்றும் இந்தக் குழுவுடன் தொடர்புடைய வைத்தியர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள வைத்தியர்களைக் கைதுசெய்வதற்கு தீவிர விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான சந்தேக நபர் கம்பஹா, டியமுல்ல பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்படும் போது, சந்தேக நபரிடம் போலியான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பல நபர்களுக்கு சொந்தமான கடவுச் சீட்டுகள் உள்ளடங்க போலியான ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வதுபிடிவல பிரதேசத்தில் வசித்து வந்த வைத்தியர் ஒருவர் 2017 ஆம் ஆண்டு திடீர் விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த வைத்தியரின் பெயரை பயன்படுத்தி இந்தக் குழு தனியார் வங்கிகளில் இருந்தும், நிதி நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம் கடனாக பெற்றுள்ளமை தெரியவந்தது.

இதனையடுத்து, உயிரிழந்த வைத்தியரின் மனைவி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்தக் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Using deceased doctor name Financial fraud private banks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here