மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு

0
4243
Artist Sithum Sudhara arrested killing wife

(Artist Sithum Sudhara arrested killing wife)
பிரபல சித்திர கலைஞரான சுதார ரஞ்சித் தனது மனைவியை உடற்பயிற்சி செய்யும் இரும்புகளால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் வெயாங்கொட, கட்டுவஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பிரபல சித்திர கலைஞரான 24 வயதுடைய சுதார ரஞ்சித், கடந்த ஜனவரி மாதம் 27 வயதுடைய சத்ராபேடி சுமுது என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிவடைந்து சில நாட்களில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று முன்தினம் (2) இரவு தனது மனைவியை சுதார கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலி படுகாயமடைந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அயலில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரான சுதார, வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
திருமணமாகி ஐந்து மாதங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேச மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Artist Sithum Sudhara arrested killing wife, Artist Sithum Sudhara arrested killing wife